நீங்கள் தஃவா பணியில்
ஈடபடுபவராக கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்களது அமைப்பினூடபக ஒரு தஃவா செயண்முறை
ஆரமபிக்கப்படுகிறது. அதன் பெயர் தஃவா மேசை.ஒரு தெருவில் மேசை ஒன்றை வைத்து அதன்
மீது இஸ்லாம் சம்பந்தமான வெளியீடுகள் வைக்கப் பட்டுள்ளன. தெருவில் பயணிக்கும் நபர்களை
அழைத்து இவ் வெளுயீடுகளைப் பயணபடுத்தி அல்லாஹ்வை அறிமுகப்படுத்துவது உங்களது
பணியாகும். இவ்வாறு உங்களது பணி நிகழ்த்தும் போது ஒரு வெளிநாட்டவர் உங்கள் எதிரில்
வருகிறார். நீங்கள் ஓரிரு வெளியீடுகளை அவரிடம் வழங்கி இஸ்லாம் என்பது பயங்கரவாதத்தை
போதிக்கும் மதமல்ல மாராக அது சாந்திக்குறிய மதமாகும் என் இஸ்லாமிய மார்க்கம்
குறித்து விளக்கமளிக்கின்றீர்கள். அவரும் அவற்றை செவிமடுத்தவராக “இல்லை
சகோதரரே நான் ஒரு தீவிரவாதியாக மார வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றேன்.”
என உங்களிடம் ஆவேசத்துடன் கூறுகிறார். காரணம் என்ன என வினவுகின்றீர்கள் அதற்கவர் “எனது
நாடு ஊழலால் நிரம்பிவிட்டது கொலை கொள்ளை என்பன மளிந்து விட்டன. அரசியல்வாதிகள்
அராஜகம் செய்கின்றனர். எனது பிராந்தியத்தின் அரசியல தலைவர் 10 கொலைகளை செயதவர்
ஆனாலும் அரச அனுசரனையுடன் பாதுகாப்பாக நிம்மதியாக வாழ்கிறார். நீதி என்பது
மருந்துக்கும் கிடைப்பதில்லை. நான் ஒரு தீவிரவாதியபாக மாறி அரசியல் வாதிகளுக்கு ஒரு
பாடம் கற்பிக்க நினைக்கின்றேன் எனவே என்னை எனது வழுயில் விட்டுவிடுங்கள்”
ஆவேசப்பட்டார். அந்த இடத்தில் என்ன செய்து அவரைச் சாந்தப்படுத்தப் போகின்றீர்கள்...
