Spenser

வாயால் தான் இந்த நிலை

          ஒருவன் காட்டு வழியாகச் சென்று கொண்டிருந்தான். வழியில் ஒரு மர நிழல் கண்ணில் பட சற்று அமர்ந்து ஓய்வெடித்தான். "ஹலோ" ஒரு சத்தம் கேட்டது. சுற்றுமுற்றும் பார்த்தான் யாரும் தெண்படவில்லை "ஹலோ" மீண்டும் ஒலித்தது. திரும்பிப் பார்த்தவன் அதிர்ந்து போனான். அவனோடு கதைத்ததோ ஒரு மண்டை ஓடு. "உனக்கேன் இந்த நிலை" என்றான். "எனது வாயால் தான்" பதிலழித்தது மண்டை ஓடு.

           ஆச்சரியம் அவனை ஆட்கொணடது. யாரிடமாவது சொல்லத் துடித்தது அவன் மனம். அரண்மனையை நோக்கி ஓட்டமெடுத்தான். அரசனையும் சந்தித்தான்.

             " அரசே ஓர் அதிசயம் கண்டேன்"

              " அப்படி என்ன தான் கண்டாய்"

             " ஒரு மண்டை ஓடு என்னுடன் கதைத்தது"

              " என்ன உளறுகிறாய்"

               " இல்லை அரசே உண்மையைத் தான் சொல்கின்றேன்.  நீங்கள் பார்தத்தால் ஆச்சரியமடைவீர்கள். உங்களை அமைத்துச் செல்லவே ஓடேடி வந்தேன். புறப்படுங்கள் அரசே"

              தொந்தரவு தாங்காமல் அரசனும் காலர்களுடன் காட்டுக்கு புறப்பட்டுச் சென்றாரன். மரத்தடியில் மண்டை ஓடு அப்படியே இருந்தது. அருகில் சென்றவன் "ஹலே!" என்றான். மண்டை ஓட்டிடமிருந்து எந்தப்பபதிலும் வரவில'லை. மீண்டும் " ஹலோ!" அதற்கும் பாதிலில்லை. "ஏய் மண்டை ஓடே நீ போசுவதைக் கேட்க அரசரை அழைத்து வந்துள்ளேன். நீ பேசவில்லையென்றால் என் உயிருக்கு உத்தரவாதம் அற்றுப்போகும்" இவனது கெஞ்சல் அரசனுக்கு ஆத்திரத்தை வரவழைத்தது. வாளை உருவி தலையைக் கொய்து விட்டான்.  தலைக​யை அங்கு விட்டுவிட்டு முண்டத்தை அள்ளிச் சென்றது அரசனின் படை.

          "ஹலோ" அரசன் மறைந்ததும் மண்டை ஓடு மீண்டும் பேசியது. "அரசன் இருக்கும் நேரம் பேசியிருந்தால் உயிரை இழந்திருக்கமாட்டேன். சன்மானம் தான் பெற்றிருப்பேன் என்னை நீ ஏமாற்றிவிட்டாய். இவனது தலை முறையிட்டது. " உனக்கேன் இந்த நிலை?" மண்டை ஓடு அவனைக் கேட்டது.

" எனது வாயால் தான்"

(சில வருடங்களுக்கு முன் எங்கோ கேட்டது)
வெலம்பொட ராஃபி-2014.02.06