நோன்புப் பெருநாள் கழிந்து ஒரு சில தினங்களுக்குப் பின் எனது நண்பர் ஒருவரைச் சந்திக்கும் நோக்கில் அவரது கடைக்குச் சென்றிருந்தேன். அவரோடு பல விடயங்களை அளவளாவிக் கொண்டிருந்தேன். நோன்புப் பெருநாள் கழிந்து ஒரு சில தினங்களுக்குப் பின் எனது நண்பர் ஒருவரைச் சந்திக்கும் நோக்கில் அவரது கடைக்குச் சென்றிருந்தேன். அவரோடு பல விடயங்களை அளவளாவிக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழிய “கொன்சர்ட் டிரஸ் ஒடர் பண்ணனும்” என்று கூறியபடி நடுத்தரப் பெண் ஒருவர் கடையினுள் நுழைய பேச்சை நிறுத்திவிட்டு நண்பர் வந்தவரைக் கவனிக்க எழுந்து சென்றார்.
நண்பர் அப்பெண்மணியை வரவேற்கும் விதம் அவர்கள் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்பதை
உண்ர்த்தியது. வாடிக்கையாளரை வரவேற்ற நண்பர், அவர் கையில் அல்பம் ஒன்றைக் கொடுத்து ஆசனம் ஒன்றில் அமருமாறு பணிக்கின்றார்.
அல்பத்தைக் கையில் எடுத்த அந்தப் பெண்
அதனைப் புரட்டிப் பார்வையிடும் போது பக்கத்துக்குப் பக்கம் வாடகையை விசாரித்த தொனி ஆடையின் தரத்தை விட அதனது வாடகையிலேயே அவருக்கு அதிக கவனம்இருந்ததை உண்ர்த்தியது. முடிவில் ஓர் ஆடையைத் தெரிவு செய்து டிசம்பர் 20ஆந் திகதி பெற்றுக் கொள்வதாகக் கூறி வாடகையைக் கொடுத்து பற்றுச்சீட்டைப் பெற்றுக் சென்றார்.
டிசம்பர் மாதத்தில் நடைபெறபெறவிருக்கும் கலை விழாவுக்கான ஆடைகளை மூன்று மாதங்களுக்கு முன்னரே ஒதுக்கிக் கொள்வதில் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன என்பது குறித்து நண்பரிடம் விசாரித்துப் பார்த்தேன்.
நான்கு குழந்தைகளுக்குத் தாயாரான அந்தப் பெண் தனது இரண்டாவது குழந்தை முன்பள்ளி செல்லும் காலம் முதல் நண்பரின் கடைக்கு வந்து செல்வார் . கலை விழா அண்மிக்கும்போது குறைந்த வாடகையில் உள்ள ஆடைகள் அனைத்தும் ஒதுக்கப்பட்டு விடும். அத்துடன் இம்முறை தனது நான்காவது குழந்தையின் கலை விழாவிற்காகவே ஆடை வாங்க வந்ததுடன் மற்றைய மூன்று குழந்தைகளினதும் பாடசாலைச் செலவுகளை டிசம்பர் மாதத்தில் எதிர்கொள்ள வேண்டிய நிலை போன்ற காரணங்கள் அந்த பெண்ணை மூன்று மாதங்களுக்கு முன்னரே இங்கு இழுத்து வந்திருக்கின்றன.
குறிப்பிட்ட சகோதரியின் நிலை ஒரு புறமிருக்க, கலை விழாவுக்கென பொருட்கள் வாங்க, வாடகைக்குப் பெற அந்தக் கடைக்கு வருகை தரும் பலரும் தமது கவலைகளை ஒரு பக்கம் மூட்டை கட்டி வைத்து விட்டு , பிஞ்சுக் குழந்தைகளின் மனம் ஆறுதல் பெற வேண்டும் என்ற நோக்கில் கலை விழாவுக்குத் தேவையானவற்றை வாங்கிச் செல்வதாகவும் நண்பர் கூறினார்.
பாடசாலை செல்வதற்கு முன் மாணவர்களின் மனோ நிலையை சீராக்கும் நோக்கில் மொன்டிசூரி அம்மையாரால் அறிமுகப்படுத்தப்பட்ட முறையே இம்முன்பள்ளிப் பாடத்திட்டம். அம்மையாரின் பாடத்திட்டத்தில் இக்கலை நிகழ்ச்சி எத்தகைய இடத்தை வகிக்கிறது என்பது ஒரு புறமிருக்க, இந்நிகழ்ச்சிகள் பெற்றோரைத் திண்டாடச் செய்யும் நிலைக்கு இட்டுச் செல்வதற்குச் சில காரணங்கள் உண்டு.
சுமார் இரண்டாயிரம் பேர் வசிக்கும் ஓர் ஊரில் குறைந்த பட்சம் ஐந்துக்கும் மேற்பட்ட முன்பள்ளி நிறுவனங்கள் காணப்படும். சராசரியாக இருபது முதல் முப்பது மாணவர்களைக் கொண்டு இயங்கி வரும் இந்த நிறுவனங்களிடையே வல்லரசு நாடுகளையும் விஞ்சியதான கடும் போட்டி நிலை காணப்படுகிறது. தத்தமது நிறுவனத்தின் மாணவர் தொகையை அதிகரித்துக் கொள்ளும் ஒரே நோக்கமே இப்போட்டிக்கன காரணம்.
இவற்றுக்கிடையிலான போட்டி நிலையின் உச்ச கட்ட நிகழ்வாக வருட இறுதியில் இடம்பெறும் கலை நிகழ்ச்சி காணப்படுகிறது. எனவே, இவை தமது கலை நிகழ்ச்சிகளை ஏனைய நிறுவனங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டி பெற்றோரின் திருப்தியைப் பெற வேண்டும் என்ற நோக்கில் தத்தமது நிகழ்ச்சிகளை கண்கவர் முறையில் அமைத்துக் கொள்ள முழு முயற்சி எடுக்கின்றன.
பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சியும் வெற்றியளிப்பதற்கு குறிப்பிட்ட பணத்தொகை செலவாகும். ஊரைப் பொறுத்தவரை விரல் விட்டெண்ணக்கூடிய தனவந்த்ர்களே காணப்படுவர். பணம் படைத்தோர் எண்ணிக்கையை விட முன்பள்ளி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் குழந்தைக்கு ஆயிரம் முதல் ஐயாயிரம் என்ற அடிப்படையில் பெற்றோரிடம் அறவிடப்பட்டு கலை நிகழ்ச்சிகளின் செலவுகள் ஈடு செய்யப்படும்.
ஐந்து வயதுடைய முப்பது குழந்தைகளைக் கொண்டு அரை நாள் நிகழ்ச்சி நிரலொன்றை அமைப்பது நிறுவனத்தின் அடுத்த சவாலாகும். எனவே, ஒரு குழந்தைக்கு நான்குக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு நிகழ்ச்சி நிரல் பூரணப்படுத்தப்படுகிறது. அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் ஒரே குழந்தை பங்கு கொள்வதால் வேறுபடுத்திக்காட்டவென நிகழ்ச்சிக்கு ஓர் உடை வீதம் அணிவிக்குமாறு பெற்றோர் வேண்டப்படுவர்.

குழந்தைகளின் நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்து இறுவட்டில் பதிவு செய்து தருவதற்கு ஐனூறு ரூபா பெறப்படுகிறது. குழந்தைகளுக்கான செலவு ஒரு புறமிருக்க, நிகழ்ச்சிக்கு வருகை தரும் தாய்மார்களின் ஒப்பனை அலங்காரச் செலவுகள் வேறு.
எமது சமூகத்தின் குழந்தைச் செல்வங்கள் அனைவருமே வைத்தியர்களாக, ஆய்வாளர்களாக, துறைசார் நிபுணர்களாக ஜொலிப்பதை இது போன்ற மேடைகளில் மாத்திரமே காண முடிவதால் இந்நிகழ்ச்சிகளை முற்றாக நிறுத்திவிட வேண்டியதில்லை. மாறாக இந்நிகழ்ச்சிகள் நிச்சயம் நெறிப்படுத்தப்பட வேண்டும்.
ஓர் ஊரிலுள்ள முன்பள்ளி நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து கலை நிகழ்ச்சிகளை ஒரே மேடையில் ஒரே தினத்தில் நிகழ்த்துவதன் மூலம் விரயங்களையும் சிரமங்களையும் தவிர்க்கலாமல்லவா? மேலும், நிறுவனங்களுக்கிடையேயான போட்டி மாணவர்களின் திறமைகளை வளப்படுத்துவதாக மாத்திரமே அமைய வேண்டும். அத்துடன் புலமைப்பரிசில் பரீட்சை, ஜீ.ஸீ.ஈ. சாதாரண, உயர்தரப் பரீட்சைகளில் சித்தியடைந்தோர், மௌலவிப் பட்டம் பெற்றோர் போன்றோரை கௌரவப்படுத்தும் நிகழ்வுகளையும் இத்துடன் இணைத்துக் கொள்ள முடியுமெனில் முன்பள்ளி மாணவர்களுக்கு இவை முன்மாதரியாக அமையலாம்.

இந் நிறுவனங்களை ஒன்றிணைக்கும் பொறுப்பை ஜமியத்துல் உலமாவின் பிராந்தியக் கிளைகளோ ஊர்ப் பள்ளி நிர்வாகங்களோ இஸ்லாமிய இயக்கங்களோ ஏற்குமாயின் மார்க்கத்தின் வரையறைகளுக்கு உட்பட்ட விதத்தில் இக்கலை விழாவை களைக்கட்டஸ் செய்யலாம். சிந்திப்போமா?
-அல்ஹஸனாத் ஒக்டோபர் 2011.-