Spenser

பத்தே கிராம் பத்திரிகை


         "என்ன பொஸ் நீங்க நிறுக்குறதப் பார்த்தா அந்தப் பேப்பரையும் திண்டாத்தான் நான் தார காசுக்கு சரியாகும்" கடையே அதிருமளவு ஒரு குரல் ஒலிக்கிறது. குரல் வந்த திசையின் பக்கம் திரும்பிப் பார்க்கிறேன்,கண்களில் பொறி பறக்க தராசை நோக்கிய வண்ணம் ஒரு பெரியவர் நின்றிருந்தார். அந்தப் பெரியவர் எதற்காக கூச்சலுடுகிறார் என்பதைப் பார்க்கும் ஆவலில் தராசின் மீது நோட்டமிடுகிறேன்.

             
   பெரிதாக ஒன்றுமில்லை, அழகாக சுற்றப்பட்ட சுருள் நிரம்பிய சீனியுடன் இலத்திரனியல் தராசின் மீது அமர்த்தப்பட்டிருந்தது. அதன் நிறையபக 1000 கிராம்களை அந்தத் தராசு காட்டிக் கொண்டிருந்தது. "என்ன கையில கொட்டித்தாரன் கொண்டு போவூங்களா?" காசுப்பட்டரையிலிருந்து கடை முதலாளியின் குரல். ஆஹா, காரணம் நன்றாக புரிந்து விட்டது.
               
                அதற்குப்பதிலாக "நீங்க என்ன கையிலயா வாங்கிட்டு வாரீங்க? அழகா பெக் பண்ணி, குரொஸ் வெய்ட், டெயார் வெய்ட் நெட் வெய்ட் என்று பிரின்ட் பண்ணிதானே உங்களுக்கிட்ட வருது? நாங்கள் காசு தந்துதானே வாங்குறோம்" என்றவர் காசை வீசி எறிந்துவிட்டு பொதியை வாங்கிக் கொணடு வேகமாக வெளியேறுகிறாரா்.
                நான் வெளியூரில் வேலை செய்து கொண்டிருந்தேன். கூட வேலை செய்யும் இரண்டு மாற்று மத நண்பர்களுடன் தங்கியிருந்தேன். சமைப்பதற்குத் தேவையான பொருட்களை வாங்க வாங்கவென சென்றபோதே மேற்படி சம்பவம் நிகழ்ந்தது. இனிமேல் இக்கடையில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன், வந்ததற்காகப் பொருட்களை வாங்கிக் கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றோம்.

                அடுத்த வாரம் பொருட்களின் பட்டியலுடன் வேறொரு கடைக்கு சென'றிருந்தோம். நண்பர் பட்டியலை வாசிக்க ஊழியர் ஒருவர் பொருட்களை எடுத்து வைக்கின்றார். தேயிலை 50 கிராம், சீனி... சீனி என்றதும் கடந்த வார சம்பவம் எனது மனத்திரையில் தெரிய ஆரம்பித்தது. எனவே ஊழியரை நோட்டம் விடத் தொடங்கினேன்.

                ஒரே நாளேட்டில் அரைப் பகுதியை எடுத்து சுருள் அமைத்து அதனுல் தேயிலையை விட்டு தராசின் மீது வைத்து 50கிராம் நிறை​யிடுகின்றார். நிரையிட்டு முடித்தவுடனேயே தேயிலைச் சுருளைப் பெற்றுக் கொண்டு குரோசரி பேக் ஒன்றை தருமாறு ஊழியரைப் பணிக்கின்றேன். அவரும் தாமதமின்றி எடுத்துத் தந்தார். தேயிலையை உறையிலிட்டு மீண்டும் நிறையிடுமாறு அவரிடம் வழங்க, தேயுலையின் நிறை 45 கிராம்களாக காட்டியது.

                ஆக, ஐந்து கிராம் பத்திரிகையை தேயிலையின் விலை கொடுத்து வாங்க வேண்டும். விளையாட்டாகக் கணக்கிட்டுப் பார்க்கிறேன். ஒரு கிலோ தேயிலை 600 ரூபாய். ஒரு கிலோ பத்திரிகையின் விலை 30 ரூபாய். 15 சதம் பெறுமானம் உள்ள பத்துரிகைக்கு முதலாளி விதிக்கும் விலை 3 ரூபாய். அற்புதமான பகற் கொள்ளை. பத்திரிகைத் தொழிற்சாலை உரிமையாளருக்குக் கூட இந்தளவு இலாபம் கிடைக்காது!

                இச்சம்பவங்களைத் தெடர்ந்து நான் செல்லும் கடைகளிலெல்லாம் எனது பார்வை தானாகவே தராசின் மீது செல்லும். "அளவு நிறுவைகளில் மோசடி செய்பவர்களுக்கு கேடுதான்" என்பதை அறிந்தவர்கள் நிலை இவ்வாரெனில் அறியாதவர்கள் நிலை எவ்வாரிருக்கப் போகிறது?

                வேரொரு நாள் காசு மாற்றிக் கொள்ளும் நோக்கில் கோழி இறைச்சி கடை ஒன்றினுல் நுழைகின்றேன். சுமார் 30வயது மதிக்கத்தக்க ஒரு நபர். கடைக்ககு முதலாளி, ஊழியர் எல்லாமே அவர்தான். என்னை சற்று பொறுத்திருக்குமாறு கூறியவர், கையில் கோழி ஒன்றுடன் வந்து மற்றைய கையில் பத்திரிகை ஒன்றை எடுத்தார். வழமை போல எனது பார்வை தராசை நோக்கி நின்றது. பத்திரிகையைத் தராசில் இட்டதும் பத்து கிராம்களாக காட்டியது. உடனே அவர் ஒரு பொத்தானை அழுத்தி நிறையை பூச்சியமாக மாற்றிவட்டு கேழியை நிறையிடுகின்றார்.

"யா அல்லாஹ் அவருக்கு பரகத் செய்வாயாக!" அல்லாஹ்வின் மீது ஆணையாக! இந்தப் பிரார்த்தனை எனது அடி மனதிலிருந்து வெனிப்பட்டது. ஏமாற்றுப் பேர்வழுளுக்குள் ஒரு நல்ல வியாபாரியையேனும் காண முடிந்தது.

                பத்தே கிராம் பத்திரிகை ஒரு கூட்டத்தை நரகத்திற்கும் சிலரை சுவர்க்கத்திற்கும் வழுகாடடும் அதிசயத்ததை பார்த்தீர்களா?
-அல்ஹஸனாத் ஜூன் 2011.